Monday, June 22, 2009

என் அருகில் நீ இருந்தால்!!




புத்தம் புது முத்தம்
அதை சொல்லும் ச் எனும் சத்தம்
எப்போதும் என் இதயக்கூட்டில் யுத்தம்..
என்னை ஏனடி கொல்கிறாய் நித்தம்..?

*******
உன்னை அடங்கா பிடாரி என்று
உன் அம்மா சொன்ன போது
அதை நம்பவில்லை நான்..

இப்போது தான் புரிகிறது..
என் உதடுகளுக்கு
நீ அடங்காத போது...!!

************

சொன்னால் கேட்பதில்லை இவை..
எப்போதும் என்னையே சுவை பார்த்தபடி..

உன்னுடைய உதடுகள்!!

**********

அம்மா நீ எனக்கு
சிரிக்க சொல்லிதந்தாய்..

அவள் அழகாய் சிரிக்கிறேன் என்றாள்!!

அம்மா நீ எனக்கு
நடக்க சொல்லிதந்தாய்

அவள் கம்பீரமாய் நடக்கிறேன் என்றாள்!!


அம்மா நீ எனக்கு
அன்பை சொல்லிதந்தாய்

அவள் என்னை காதலிக்கிறேன் என்றாள்!!

*********

பூக்களின் தேசத்துக்கு ஒரே எதிரி நீ..

உன் புன்னகையின் தாக்குதலில்
தினமும் மாலையில் வாடின பூக்கள்!!

********

தேடிகொண்டே இருக்கிறேன்..

உன்னிடம் தொலைந்து போன
என் இதயத்தை

உனக்குள்...!!!

*********

எப்போதும் போல் தான் நடந்து வருகிறாய்..
ஆனால் ஏனடி என் இதயம் மட்டும் இப்படி குதிக்கிறது..?!

எப்போதும் போல் தான் சிரித்து பேசுகிறாய்..
ஆனால் ஏனடி உதடுகள் மட்டும் காய்ந்து போகின்றது..?!

எப்போதும் போல் தான் புன்னகை பூக்கிறாய்..
ஆனால் ஏனடி என் மனம் செத்து செத்து பிழைக்கிறது..?!

எப்போதும் போல் தான் ஐ லவ் யூ என்கிறாய்..
ஆனால் ஏனடி அந்த மூன்று வார்த்தைகளும் என்னை மூர்ச்சையாக்குகிறது..?!

**********

பொல்லாதவன்-2..?!

ஹாய் நண்பர்களே!!

என்னடா இவன் எல்லாம் கதை சொல்லி கேட்கும் அளவுக்கு ஆகிட்டோமேன்னு ஃபீல் பண்ணாதீங்க.. எனக்கும் நல்லா கதை விட..ச்சே.. சொல்ல வரும்..

சரி கதைக்கு வருவோம்..!!

ராம்குமார் மார்க்கெட் அருகே வந்து தனது யமஹா கிளேடியேட்டரை நிறுத்தினான்.

"டேய் ராம்...எங்கடா இவ்ளோ தூரம்...?!" என்றார் சண்முகம்.

"அது ஒண்ணுமில்ல மாமா.. சும்மாத்தான் பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்"

-"சரி சரி.. வா.. கடைக்கு வா. எத்தன நாள் ஆச்சு உன்ன பாத்து .. ஆளே இளச்சி போன மாதிரி இருக்கியே ஏன்?"

"அட..என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க.. நான் நேத்து தான் வெயிட் பாத்தேன்..
எடை 4 கிலோ கூடி இருக்கு.. நீங்க என்னடான்னா..."

"நீ என்ன சொன்னாலும் சரி மாப்ள.. நீ இளச்சுத்தான் போய்ட்ட... எங்க அக்கா சரியா சோறாக்கி போடுதா இல்லையா?!"

கடைக்கு உள்ளே சென்றனர்..

கடைப்பையனை பார்த்து சண்முகம்..

"தம்பி.. ஓடிப்போய் ஒரு கலர் வாங்கியா... பணம் அக்கவுண்ட்ல போட்டுக்க சொல்லு.."

கடைப்பையன்..
"ஆமா.. அவனுக்கும் பணத்துல அக்கவுண்டு.. எனக்கு சம்பளத்துல அக்கவுண்டு.. பக்கி" என மனதுக்குள் திட்டிக்கொண்டே செல்கிறான்.

"எதுக்கு மாமா வீண் செலவு " என்று சம்பிரதாயமாக சொல்லி வைக்கிறான் ராம்.

"இருக்கட்டும் மாப்ள..நமக்குள்ள என்ன?"... என்கிறார் சண்முகம்.

"ஆமா மாப்ள.. கேக்கணும்னு இருந்தேன்.. வண்டி கண்டிஷன் எப்படி?"

"அச்சோ மாமா.. மறந்தே போய்ட்டேன்" என அலறுகிறான் ராம்.

"என்ன மாப்ள.. என்ன ஆச்சு?"

"வண்டி சாவி..வண்டிலேயே இருக்கு. இருங்க.. வரேன்.."

பதறியடித்து கொண்டு ஓடினான்..

வண்டியை நெருங்கி பார்த்தான். சாவி அதிலேயே இருந்தது.

உடனே சாவியை எடுத்துகொண்டு திரும்பினான்.

செல்லும் வழியில் ஒரு விநாயகர் கோவில் இருந்தது.

அதில் விநாயகருக்கு ஒரு அர்ச்சனை செய்து விட்டு வெளியே வந்தான்.

சண்முகம் நின்றிருந்தார்..

"என்ன மாப்ள.. சாவி கிடைச்சுடுச்சுல்ல.. வண்டி இருக்குல்ல.. ?!"

"ஆங்.. இருந்துச்சு மாமா. நல்ல வேளை . ஒரு நிமிஷம் ஆடிப்போய்ட்டேன்"

"உன் நல்ல நேரம்.. மாப்ள.. இனிமே ஜாக்கிரதையா இருந்துக்கோ"


"சரி மாமா.. நான் கிளம்புறேன்"

"சரி மாப்ள.. உனக்கும் வேலை இருக்கும். போய்ட்டு வா"

நிதானமாய் வண்டியை நோக்கி சென்றான்.

டுத்த சில நிமிடங்களில்..

"சார்.. என் பேர் ராம்குமார்..என் வண்டிய காணோம்.. யாரோ திருடிட்டு போய்ட்டாங்க"..

ஏட்டு எட்டி பார்த்தார்.

"தம்பி ஒரு காபி..அப்படியே ரெண்டு வடை சொல்லிடு"

ராம்குமாரை பார்த்து..

"வாங்க.. சொல்லுங்க... என்ன விசேஷம்?"...

Saturday, June 20, 2009

வில்லு நாயகனும்.. 32 கேள்விகளும்..!!



1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


என்னிடம் பிடிச்ச ஒரே விஷயம் பேர்தான்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அழாதது எப்போதுன்னு கேக்கணும்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இங்க தலையெழுத்தே கிறுக்கலா இருக்கு ..இதுல கையெழுத்தை கேக்க வந்துட்டாரு..!!
(அடிக்க வருகிறார்..அவ்வ்வ்)

4).பிடித்த மதிய உணவு என்ன?

லெமன் ஜூஸ்.


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதுக்குத்தானே அனுபவிச்சுட்டு இருக்கேன். இன்னும் வேறயா?


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

தண்ணீரில் குளிக்க பிடிக்கும்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

”குஷி”க்கு பிறகு ..இடுப்பை தான் பார்க்கிறேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: நடிப்பு.

பிடிக்காத விஷயம் : எதன்னு சொல்ல... ஒரு படமா.. ரெண்டு படமா?

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயம்: வெற்றி படங்களுக்கு என்னை பாராட்டுவது..

பிடிக்காத விஷயம் : தோற்ற படங்களுக்கு மக்களை பாராட்டுவது.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

நயன் அண்ட் த்ரிஷா.


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ச்சீ..அசிங்கமா பேசாதீங்க..!!

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வில்லு படத்தில்.. வடிவேலு காமெடி..!!

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்னையே பேனாவா மாத்துற அளவுக்கு எவனுக்கு தைரியம் இருக்கு?(பயத்தோடு சுற்றுமுற்றும் பார்க்கிறார்)

14.பிடித்த மணம்?

”கோ...........”(சென்ஸாரால் நறுக்கப்பட்டது)

வேணாம்..வாய கிளறாதீங்க..


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

எனக்கு இதை பார்வேர்டு செய்தது..பிடிக்காத விஷயம்..எனக்கே இதை பார்வேடு செய்தது..
அவரை அழைக்க காரணம்.. இன்னுமா புரியல..(வில்லத்தனமாக சிரிக்கிறார்)

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

யாருன்னு தெரியலை.. சிக்கினார்..சின்னபின்னமாக்க படுவார் என்று அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.(குரூர சிரிப்பு முகத்தில்)

17. பிடித்த விளையாட்டு?

கபடி.. கபடி.. !!

18.கண்ணாடி அணிபவரா?

போட்டுகிட்ட மட்டும் படம் ஸில்வர் ஜூப்ளியா ஓடிட போவுது..?!

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ம்ம்.. பாஸ்..

20.கடைசியாகப் பார்த்த படம்?

வில்லு..

ஏய்..பேசிட்டு இருக்கொம்ல.. சைலன்ஸ்.!!

21.பிடித்த பருவ காலம் எது?

படம் வெற்றிபெற்ற காலங்கள் எல்லாமே..(விட்டத்தை ஏக்கமாய் பார்க்கிறார்)..!!

22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

சினிமாவால் அழிந்த சிலர்.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அது என்ன டெஸ்க்டொப்?

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :என் படத்தில் நான் பேசிய பஞ்ச் டயலாக்.

பிடிக்காதது : பேட்டி கொடுக்கும் போது மொணமொணவென பேசுவது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பத்ரி படத்துக்காக ஸ்விச்டர்லாந்து..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

கை காலை வேகமா..ஆட்ட தெரியும்..
அதாங்க டான்ஸ்னு எதோ சொல்லுவாங்களே அதுதான். அதுமட்டும்தான்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

அவர் படம் ஹிட்டாவது, என் படம் சொல்லிவெச்ச மாதிரி ஃப்ளாப்பாவது..!!



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்.. உங்க பாஷையில சொல்லணும்னா கொலைவெறி.(நாக்கை துறுத்தியபடி முறைக்கிறார்)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

கோடம்பாக்கம்..

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் இருக்கேனேன்னு சந்தோஷப்படுங்க..அத விட்டுட்டு ..

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

.. திருட்டு முழி முழிக்கிறார்...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கை ஒரு வட்டம்.. அதுல தோக்குறவன் ஜெயிப்பான்..(அழுகிறார்)ஜெயிக்கிறவன் தோப்பான்..!!

இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

எவண்டா எனக்கு இதை பார்வேடு பண்ணது?

டிஸ்கி :
இது விஜயை தாக்கவோ, கிண்டல் செய்யவோ போடப்பட்ட பதிவு அல்ல..!!

Thursday, June 18, 2009

ஒரு பாண்டா கரடியின் கனவு..!!!

Kung Fu Panda





ஒரு ஊருல ஒரு பாண்டா கரடி இருந்துச்சாம். அதுக்கு குங்-ஃபூ கலையை கத்துக்கணும்னு ரொம்ப ஆசையாம். ஆனா அவங்க அப்பா அவனை
நூடுல்ஸ் விக்க சொல்லிட்டே இருந்தாராம். ஒரு நாளு..

இப்படி சொல்ல வேண்டிய கதையை மெருகேற்றி.. அழகாய், அனிமேஷனாய், அம்சமாய் குடுத்திருக்கிறார்கள் நமது ஹாலிவுட் சகாக்கள்.
நம்ம டிரீம்வர்க்ஸின் கைவண்ணத்தில் அற்புதமாய் ஒரு படைப்பு.

ஒரு உயரமான உருளைகிழங்கு கணக்காய் ஒரு பாண்டா கரடி.
அதனுடைய ஆசைகள், கனவுகள்,லட்சியம் எல்லாமே குங்-ஃபூ.(இதுவும் கராத்தே போலத்தான்..மேலும் தகவலுக்கு இங்கே பாருங்கள்).
அதில் தேர்ச்சி பெற அது அனுபவிக்கும் கஷ்டங்கள். அதை அடைந்துவிட்ட பிறகு அதற்கு வரும் முக்கியமான சவால். இவை அனைத்தையும்
நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார்கள்.




எப்படியும் தன்னை தனித்து நிலைநாட்டிகொள்வதில் ட்ரீம்வர்க்ஸ் எப்போதும் முதலிடம் வகிக்கிறது. பிக்ஸரின் திரைப்படங்களுக்கு
ஈடுகொடுக்கும் விதமாக எப்போதும் ஒரு படைப்பை தன்னிடம் கொண்டுள்ளது ட்ரீம்வர்க்ஸ்.

இது அனிமேஷன் தானா? அல்லது நிஜ சம்பவங்களா? என்று திகைக்க கூடிய அளவுக்கு
அனிமேஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள் ”கனவுவேலையாட்கள்”. சண்டை காட்சிகளில் இருக்கும் தத்ரூபத்திற்காகவே
படம் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் பிக்ஸரின் வால்-இ ஆஸ்கரை தட்டி சென்றதுதான் சோகம். இருந்தாலும் மக்கள் மனதில் சிறந்த அனிமேஷன் படமாக
கடந்த 2008ம் ஆண்டு குடிகொண்டது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த படத்தில் வரும் முதல் காட்சியானது 3டி-யில் செய்யப்படாமல் 2டி அனிமேஷனாக ஜேம்ஸ் பாக்ஸ்டர் (என் மானசீக குரு)என்கிற அனிமேட்டரால்
தனியே தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை அவர் நாவலேயே கேட்டு அறியும் பாக்கியமும் எனக்கு கிடைத்தது ,சமீபத்திய பெங்களூரு பயணத்தின் போது.

உதிரி தகவல்கள் :

இதில் வரும் குரங்கு கதாப்பாத்திரத்திற்கு நமது அதிரடி மன்னன் ”ஜாக்கி சானு”ம்..
இதில் வரும் பெண்புலி (அந்த புலி இல்லீங்கோ..இது டைகரஸ்)க்கு நம்ம ”ஏஞ்சலீனா ஜூலி”யக்காவும் குரல் குடுத்திருக்கிறார்கள்.

படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க கூடியது.

சிடிக்கள் முக்கிய நகரங்களில் நிச்சயம் கிடைக்க கூடியதே!!

நம்ம ரேட்டிங் [7/10]

Saturday, June 6, 2009

ப்ளீஸ் இத படிக்காதீங்க.. !!


அன்றும் அப்படித்தான்..
ஒரு மொக்கை மாலை வேளையில் வீட்டு கணினி முன் அமர்ந்து கொண்டு
என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துகொண்டு இருந்தேன்.

தங்கையின் ரிசல்டாவது பார்க்கலாம் என்றால் அந்த சைட்டே லோடு ஆகாமல்
டபாய்கிறது. அவள் என்னை சந்தேகப்படுகிறாள் பாவி.
நாந்தான் ஏதோ செய்து அவள் குறிப்பிட்ட அந்த வலைப்பக்கத்தை இயங்கமுடியாமல் செய்து விட்டதாக சொல்லிகொண்டிருந்தாள்.
எனக்கு அப்படியெல்லாம் செய்யத்தெரியாது என்று சொன்னால் நம்ப மறுக்கிறாள்.
நீதான் தினம் தினம் ஏதேதொ கோடிங் கீடிங் என்றெல்லாம் சொல்றியே..
அதுபோல் நீதான் எதாச்சும் பண்ணி இருப்ப.. என்கிறாள்.

அது ஜாவா கோடிங்டி.. இது எச்.டி.எம்.எல்.னு தெளிவா சொல்லிபார்த்தேன்.
ம்ம்.. கேட்டபாட்டை காணோம்..

இது என்னடா கூத்தபெருமாள் கூத்தா போச்சேன்னு நினைச்சுகிட்டேன்.


இப்படியாக பொழுது போய்கொண்டிருந்த போது ..
திடீர் என்று ஒரு எண்ணம் உதித்தது.

நேராக கூகிள் பக்கம் போனேன். அதில் சேர்ச் பாக்ஸில்
"உருப்படியாக எதாச்சும் இருந்தால் காட்டு" என்று அடித்தேன்.

அடி சக்கை.. கூகிள் கூகிள் தான்.
நம் பேர்போன பதிவர்களின் பக்கங்கள் பல திறக்கப்பட்டு கிடக்கின்றன என் கண்பார்வைக்கு.

அடிச்சுதுடா ஜாக்பாட் என்று ஒவ்வொன்றாக மேய.. (ஆடு போல் மெதுவாய்)கிறேன்.

முதல் லிங்கே சூடாக கிடைத்தது. அந்த லிங்க் வேறு யாருடையதும் அல்ல.
நமது திரைக்கடல் பதிவருடையது.

அவரின் பதிவு ஒன்றை படித்த பிறகு அந்த லிங்கை கூட வெளியிடலாமா வேண்டாமா என்ற மனபீதி கிளம்புகிறது. என்றாலும் சிபி மீது நூறு டன் பாரத்தை போட்டு லிங்கை இங்கே தருகிறேன்.

அடுத்து நம்ம வருத்தப்படாத.பசங்க.சங்கத்து பதிவு ஒண்ணு கண்ணில் சிக்கிச்சு.
அதாங்க.. இப்போ பேர் மாற்றம் ஆகி இருக்கும் வருத்தப்படாத.பசங்க.சங்கத்து பதிவு ஒண்ணு சிக்கிச்சு.

அதுதான்..சிவனையும்..அதாங்க லார்டு சிவாவையும்.. லார்டு பெருமாளையும்
கலாய்க்கும் பதிவு.

அதில் வரும் பாடல்களும் விளக்கங்களும் அடடா..என சொல்லவைப்பவை.
இந்த சுட்டியில் பாருங்க..

மேலும் பலபல..பிரபல பதிவர்களின் சூடான பதிவுகள்.. அந்த தேடல் பக்கங்களில் குவிந்து கிடக்கின்றன..

தேடி எடுக்க சிரமப்படவே வேண்டாம்.. சும்மா "உருப்படியா எதாச்சும் இருந்தா காட்டு" என்று தமிழில் டைப்புங்க போதும்..

பதிவுகள் வந்து குவியும்..

சரி.. டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன்.. அடுத்த பதிவில் சந்திப்போம்.


கும்மிக்கும் அனுமதி உண்டு என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


டிஸ்கி.. :
வந்தமா..படிச்சமா போனமான்னு இருந்திட கூடாது.. கமெண்ட் போட்டு கணக்கை தீர்க்கணும்..சொல்லிட்டேன்.

நீ வருவாய் என..!!


என்னமோ வரவர.. கவிதைகள் தான் அதிகமாய் பதிவேறுகிறது என் வலைப்பக்கத்தில்.இருந்தாலும் இதை ரசிக்கவும் சிலர் என்னை பின் தொடருகிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சிதான்.
சரி.. இப்போது கவிதை உலகத்துக்கு போவோம்.


அடடே!! வந்துவிட்டாயா
வந்தமைக்கு என் நன்றி;


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

மயில்கள் எனக்கு தோகையில்

சைகை சொன்னதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

காற்று என் கன்னம் வருடாமல்

அறைந்துவிட்டு சென்றதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

சாலை செல்லும் வாகனங்கள்

சடுதியில் மறைந்ததோ..?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்

குருவிகளும் காக்கைளும் தங்கள்

கூடுவந்து சேர்ந்தனவோ...?!


நீ "வருவாய்" எனத் தெரிந்துதான்

என் விவசாயியின் உதடுகள்

புன்னகை பூக்களை சிந்துகிறதோ...?!


நீ வருவாய் எனத் தெரிந்துதான்
மரங்களெல்லாம் மகிழ்ந்து

மலர்களை உதிர்க்கிறதோ...?!

...என்ன இருந்தாலும்.. ...எப்படி இருந்தாலும்.. ...எதுவாக இருந்தாலும்..
உனக்காக நான்
இயற்கையை
நான்
வன்மையாக கண்டிக்கிறேன்.



ஏனெனில்.. நீ
அழுதுதானே நாங்கள்
மகிழ வேண்டி இருந்தது,
மகிழ வேண்டி இருக்கிறது,

மகிழ வேண்டி இருக்கும்.

முக்காலும் உன்னை அழவைத்தானே

அவனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
எனினும் நீ வந்தமைக்கு நன்றிகள் கோடி..!!

Wednesday, June 3, 2009

நானும் இந்த வலையில் சிக்கிவிட்டேன்.. !!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


இப்போதான் எனக்கும் அந்த யோசனை வருது. இருந்தாலும் சொல்றேன்.
சும்மா திடீர்னு தோணிண பேர்தான் இது. (ஹிஹி.. இதுக்கே இவ்ளோ யோசனையான்னு கேக்ககூடாது)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அந்த அறுவை மெகா சீரியலை பாட்டியோடு உக்காந்து பார்த்த போது.. அவ்வ்வ்வ்....!!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும்,
ஏனோ தெரியலை மத்தவங்க பிடிக்கலைன்னுதான் சொல்றாங்க..
(இன்னும் பயிற்சி வேணுமோ?!)
4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் வெஜிடேரியன் .. அதனால்..
...


கோழிக்குழம்பு நல்லா திக்கா காரமா இருக்கணும். அப்புறம் அந்த முட்டை பொரியல்.
(அதான் சொன்னேன்ல.. நான் - வெஜிடேரியன் என்று.. !!)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெல்லாம் .. ஆமா.. ஏன் வெச்சிக்ககூடாது. பிடிச்சா நண்பர்களா இருப்போம். இல்லியா ப்ரெண்ட்ஸாவே இருப்போம்.. வாங்க பழகலாம்..!!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதலில் குளிக்கவே பிடிக்காது. இருந்தாலும் அருவிதான் எனக்கு பெஸ்ட். சுருளி பால்ஸ்ல கடைசியா குளிச்சேன். ஆகா.. அருமையோ அருமை.. என் ஜாய் பண்ணி குளிச்சேன். நீங்களும் போய் பாருங்க. அருமையா இருக்கு.




7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் , கண்கள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: பிடிக்காத விஷயங்களை மாற்றிகொள்வது.

பிடிக்காத விஷயம் : பிடிக்காத விஷயங்களே இல்லாமல் போனது. அதான் எனக்கு பிடிக்கலை..


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் பார்ட் பார்ட்டா பிரிக்க ஆள் வரலை. வந்ததும் சொல்றேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்பா ..............


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெண்ணிற ஆடை நிர்மலாவின் முதல் படத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிறம்தான்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம். பார்த்துகொண்டும் கேட்டுகொண்டும்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம், கறுப்பு.

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மணம், சந்தன வாசம்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜோசப் பால்ராஜ்- மாரநேரிகாரர்.
சென்ஷி- பின்நவீனத்துவத்தின் பிள்ளை.
சீனா- ஓல்டு ஈஸ் கோல்டு மா

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

தமிழரசியின் கவிதைகள் அத்தனையும் அவ்வளவு அழகு. படிக்கதூண்டுபவை அவை. கலக்கும் கவிதை சோலை அவர்.

17. பிடித்த விளையாட்டு?

கில்லி தாண்டி, நொண்டி குதிர, கண்ணாமூச்சி, அஞ்சாங்கல், ரிங்கா ரிங்கா ரோஸஸ்...

இதெல்லாம் பிடித்த விளையாட்டுகள் அப்போது.

இப்போது ஷட்டில் , புட்பால், ஸ்நோ பவுலிங்க்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை ஆனால் அணிய வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


ஆக்ஷன் திரில்லர்,
அறிவியல் புனைவு படங்கள்,
அனிமேஷன் படங்கள்.
ப்ரெஞ் படங்கள் அதிகம் பார்க்க பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, டுவல் என்கிற ஆங்கிலப்படம்.(இரண்டையும் ஒரே நாளில் பார்த்ததால் குறிப்பிடுகிறேன்.)

21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழிதான்.

ஏனெனில் அந்த மாதங்களில் இரவின் நீளம் அதிகம். நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.

அதுவும் காலை குளிரில் குளித்து கோவிலுக்கு போனால் அட..அட.. திவ்ய தரிசனம் கிட்டுமே..(கடவுளின்!!)..


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Take it Easy- பாகம் 1.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு நாளைக்கு மூன்று முறை.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு, வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை.

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்.(பொய்ய்ய்ய்ங்ங்ங்ன்ங்....!!)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

குஜராத் .. ஒரு சுற்றுலாவிற்காக..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

நல்லா வரைவேன்.
கவிதை எழுதுவேன்.
பாட்டுக்கு தாளம் போடுவேன்.
நன்றாக சமைப்பேன்.
எல்லோருடைய தனித்திறமைகளையும் ரசிப்பேன்.
அதைப்போல் நானும் முயற்சி செய்து பார்ப்பேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உங்களை புத்திசாலின்னு யாரோ சொன்னதை...

(சும்மா உல்லுலாயி.. நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்!!)



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நாங்களெல்லாம் அகம் ப்ரம்மாஸ்மிப்பா..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுவிசர்லாந்து, சிம்லா, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

அவங்க வரட்டும்.. கேட்டு சொல்றேன்..ஓக்கே!!

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மகிழ்ந்திரு, மகிழ்ச்சிபடுத்து.



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

சீனா, ஜோசப், சென்ஷி.

Monday, June 1, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது ! பாகம்-3

இந்த மூன்றாம் பாகம் என் வாழ்க்கையோடு சரியாக பின்னப்பட்டதாக உணர்கிறேன்.
ஆம்.. இந்த பாகத்தில் நான் சொல்லப்போவது சூழ்நிலைக்கேற்றபடி தன்னை சரியமைத்துக்கொள்வது பற்றி.
இதை ஆங்கிலத்தில் “Evolve, Evolution" போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்கள்.

பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் சூழ்நிலைக்கேற்றபடி மாறிய ஒன்றுதான்.
ஆம்.. வெறும் புழுவாய் தன்னை ஏற்றுகொள்ளமுடியாத அந்த பட்டாம்பூச்சி தன்னை இரு உயர்ந்த இடத்தில்
கொள்ள ஆசைப்பட்டதன் விளைவுதான் அதன் சிறகுகள்.
அதன் சிறகுகள் அதற்கு மிகப்பெரிய பெருமையை தேடிந்தந்திருக்கிறது.அதன் உருமாற்றம் அதனுடைய வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது.அதனிடம் இருக்கும் இறைமையை வெளிப்பட வைத்து அதனை அழகான ஒரு
உயிரனமாக ஏற்றுக்கொள்ள வைத்தது.

இப்படி தன்னை சுற்றியுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைப்பை மாற்றிக்கொள்வதன் அவசியம் என்ன?
வாழ்க்கை போராட்டம் தான். அவைகள் வயிற்றுக்காக செய்யும் அந்த தகவமைப்பு மாற்றத்தை நாம் நம்
ஆன்மாவுக்காக செய்தே ஆகவேண்டியுள்ளது. அப்படி சில உயர்ந்த நோக்கங்களுக்காக தன்னை தகவமைத்துகொள்கிற எந்த
மனிதனும் வீணாக போனதில்லை. என் வாழ்விலும் இது நடந்திருக்கிறது.

”தந்தை காலமாகி விட்டார்”.. மருத்துவர் அந்த வார்த்தைகளை சொல்லும்போது என் அம்மா மயக்கமுற்றார்.
தாங்கி பிடித்து மெல்ல அவர்களை சரி செய்து.. அடுத்த இருபது நிமிடங்கள் என் கண்களில் நீர் நின்றது.
நின்ற வண்ணமே இருந்தது.. கீழே விழாமல். மெல்ல மெல்ல என் மனநிலை மாறி வருவதை என்னால் உணர முடிந்தது.
அப்பாவின் சடலத்தினை வீட்டில் வைத்த போது நேரம் 1.30 மணி. நடு ஜாமம். என் தாயும் பாட்டியும் கண்ணீரில் நனைகிறார்கள்.
என்னால் ஏனோ அழ முடியவில்லை. அப்பாவின் நண்பர் ஆறுதல் சொல்ல அருகே வந்த போது.. ”அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க” என்ற போது
அவர் மலைத்துதான் போனார். அவருக்காக சோகமாய் அமர்ந்தது அந்த இருவது நிமிடங்கள் மட்டுமே.
இப்போது தூக்கு சட்டியுடன் இடுப்பில் ஒற்றை வேஷ்டியுடன்.. அவரின் இறுதி ஊர்வலத்தில்..சாலையில் நான் நடக்கிறேன். எனக்கு அப்போது தான் உறைத்தது..
என் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என்பது. ஏதோ ஒன்று என்னை சாயாமல் தாங்கி நின்றதை உணர்ந்தேன்.

என்னை அழசொல்லி எவ்வளவோ பேர் வற்புருத்தினார்கள் என்றாலும்..அழ தோன்றவில்லை.
மனோரீதியான மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன,இருக்கின்றன.

சரி.. இந்த சம்பவத்திற்கும் பட்டாம்பூச்சிக்கும் என்ன தொடர்பு. அது சொன்னது என்ன?
...சொல்கிறேன். பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் இதுவும் ஒரே
விஷயம்தான். ஆம் அது உடல்பூர்வமான தகவமைப்பு மாற்றம். இது மனப்பூர்வமான எவல்யூஷன்.




தன்னை முட்டாள் என்று பள்ளியை விட்டு நீக்கிய ஆசிரியையிடமே அறிவியல் மேதையாக மெடல் வாங்கியவர் ஐன்ஸ்டீன்.
அன்று அவருக்குள் நிகழ்ந்ததும் இதே மாற்றம் தான்.

”சூழ்நிலை உன்னை என்ன சொல்கிறது என்பது தேவையில்லை.
சூழ்நிலையிடம் நீ என்ன கற்றுகொண்டாய் எனபது தான் முக்கியம்” என்கிறார் மார்க்ஸ்.

எனவே உங்களிடம் நீங்கள் பேசி மெல்ல மெல்ல உங்களின் லட்சியத்தை நோக்கி செல்பவராக மாற்றுங்கள். மாறுங்கள்.
சூழ்நிலை உங்களுக்கு பட்டம் கட்டியது போதும். இனி உலகத்தை நீங்கள் கட்டுங்கள். கட்டியாளுங்கள். வாழ்த்துக்கள்!!